You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Sunday, September 12, 2010

உயிர் காதலிக்கு ஒரு கவிதை


என் தாய், இறுதிவரை வரமாட்டாள் என்பதை உணர்ந்து, அன்றே
உன்னை எனக்கு தாரமாக்கி விட்டாள் போலும் - உன்
பந்தம் உண்மையிலேயே கருவறையில் மலர்ந்த சொந்தமடி

நான் வாழ வேண்டுமென்று நீ துடித்த துடிப்பிற்கு
இதுவரை கணக்கு ஏதடி?
ஒரு முறையாவது உன்னை தொட்டிருப்பேனா
அல்லது "உயிரே,..இதயமே..என் காதலியே....." என்று
நலம் விசாரித்திருப்பேனா ?

என் வருகையை எதிர்பார்த்து எத்தனை நாள்
நீ ஏங்கியிருப்பாய்
காலம் முழுதும் உன்னை ஏங்கவைத்த
கேவலமான பாவியடி நான்...
சுயநலக்காரன் இவன், என்று தெரிந்தும்-நான்
வாழவேண்டுமென்று நீ துடித்தாய்

என் மீது எத்தனை காதல் தான் உனக்கு,
இறுதிவரை உன்னை துடிக்க விட்டபோதும்
என்னை நீ ஒரு போதும் நீ துடிக்க விட்டதில்லையே இதயமே!
போடி போடி பயித்தியக்காரி!!!!

உன் உயிர் துடிப்பை அந்த ஆண்டவன் மட்டுமே
அறிந்திருப்பான்
என்னை வாழவைத்த என் காதலியே...
என் உயிரே..... என் ஜீவனே....
காலதேவனின் ரெஜிஸ்டர் புத்தகம்
எனக்கு நாள் குறித்துவிட்டது

இதயமே !!!!!!!இதயமே !!!!! நான் வாழ நீ துடித்தாய்
நீ வாழ பாவி நான் ஒருபோதும் நினைந்ததில்லையே
மனம் திறந்து ஒன்றுக் கேட்கின்றேன்???
என்னை மன்னிப்பாய??? ஒருமுறையாவது
உன்னோடு என்னை அணைத்துக்கொள்வாயா???
உன் உயிரின் நாதத்தில் கலக்க இப்போதாவது
எனக்கு அனுமதிக்கொடு......please.....please.......please

அப்பாவி இதயமே!!!!!என் சொந்தமே!!!!
நான் உறங்கும் போதெல்லாம் நீ விழித்திருந்து, எனக்கு
உயிர் பிச்சை கொடுத்தாய்--ஆனால்
இன்று நீ துடிப்பதை நிறுத்தி விட்டாய் நான்
நிரந்தரமான உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.......

(எது இல்லை என்றால் காதல் இல்லையோ,உயிர் இல்லையோ
அந்த இதயத்திற்கு இந்த கவிதை சமர்ப்பணம்...காதலர்கள் தினத்தில், காதலை ரோஜாப்பூவால் பண்டமாற்று வியாபாரம் செய்யும் கோமாளிக்காதலர்களே, உங்களுக்கு ஒரு செய்தி ,ரோசாவிலும் மொன்மையானது இதயம் , அதையும் சற்று காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள், காரணம் அது தான் உங்கள் வாழ்க்கையின் ஜீவநாதம், உன்னை வாழவைக்கும் இதயத்தை முதலில் காதல் செய் அதன் உயிர் துடிப்பை உணர்வதற்கு முயற்சிசெய்...)

Saturday, September 11, 2010

The mystics of sound (நாதப்ரம்மம்)


Sound is the vibration of air molecules,which we measure by pulses per second,or hertz.The vibrationf of molecules create solidity,sound,colour,light and all living beings.Light vibrates at a very high frequency manu octaves above sound waves.White light is a frequency range(like sound) called the visible light spectrum (VLS),which breaks down into color.RED is the lowest frequency,violet the highest,and it goes
red,orange,yellow,green,blue,indigo,violet.This means you resonate with higher frequencies by wearing violet and lower frequencies by wearing red.
Which is why Saints wear violet robes and barflies wear red dresses.THese simple octives underlie all matters;Everything is made of vibrations.Once this is fully comprehended,it makes sense that the many dimentions could form in planes where certain frequencies vibrate.We cannot see or hear extremely high dimentions,just as we cannot hear sound much above the range of the piano keyboard.But literally anything could be vibrating in these higher zones,but such things would not be physical as we are in 3D.

Friday, September 3, 2010

ஈழத்து தமிழச்சிக்கு எங்களின் உயிர் வணக்கங்கள்


பூமி பந்தில் சற்று வித்தியாசமான தாய்மார்கள் இவர்கள்,
குழந்தைகளை பெற்றுக்கொண்டதனாலேயே, தாய்மை பதவி அடைந்துவிட்டவர்களைதான்
இதுவரை உலகம் அறிந்திருக்கும், இது காமத்தின் கட்டாய சொகுசு
காலதேவனுக்கு இரையாகப்போகும் பரிசு -ஈழத்து தமிழச்சி
தமிழ் உணர்வையும் வீரத்தையும் ப்ரசவித்துவிட்டு
கன்னிகளாகவே உயிர் துறந்தவர்கள்,
கன்னித்தாய்மார்களே!!! மீண்டும் ஒரு பிறவிவாய்த்தால்
உங்கள் கருவறையில் ஒரு முறையாவது
படுத்துறங்க வாய்ப்புகொடுங்கள்....
அப்படியாவது இனி எங்களுக்கு தமிழ் உணர்வும்
வீரமும் பதியட்டும்..அடிமை விதி மடியட்டும்.....
எங்களின் உயிர் வணக்கங்கள்........