You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Tuesday, November 15, 2011

ASTROLOGICAL INSIGHT.....



















பிரபஞ்ச வீதியில் நாம் காணும் அனைத்தும் ஒரு கால நியதியை அடிப்படையாகக்கொண்டு நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றது.அண்டவெளிகளுக்கும் மனிதனுக்கும் நேரடியான சூக்கும தொடர்பு நம்மையும் அறியாமல் இயங்கிக்கொண்டும் இயக்கிக்கொண்டும் வருகின்றது.Cosmological master plan பிரபஞ்ச விதியின் அடிப்படை சூத்திரத்தில், மனிதன், உலகில் காணும் அனைத்து வஸ்த்துக்களோடும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றான். Matter + Energy = Mc=E காணும் பௌதீக பொருட்கள் அனைத்தும் இதன் விகீதாச்சாரமாகவே அடிப்படையில் உருவெடுத்திருக்கின்றது.

சர்வம் சக்தி மயம் என்கின்றோம் இதன் அறிவியல் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தால், காணக்கிடைக்கும் அறிவு பூர்வமான பதில்,இந்த உலகத்தில் காணும் பொருட்கள் அனைத்தும் ஒரு சுழற்சி அதிர்வின் {vibration & frequency} கோட்ப்பாட்டில் இயக்கம் கொண்டிருக்கின்றது.சுழற்சி உண்டானால் அதில் கதிர் இயக்க வீச்சு {radiation} உண்டாகும், கதிர் இயக்க வீச்சு உண்டாகுமேயானால் அதனோடு மின்காந்தம் {electromagnetic force} உருவாகும்...நம் பூமியில் அயகாந்த வெளி { ironic ether atmosphere } உள்ளது , இதனிடையேதான் மின்காந்தம், நமது வெளி எங்கும், பரவிக்கொண்டிருக்கின்றது .
மனிதனின் எண்ண அலைகள் இதன் வழியாகவே பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றது.

மேலும் நம் சூரிய குடும்பத்தில் { Galaxy } காணும் கிரகங்களின் சுழல்வதிர்வின் வீச்சு நாம் வாழும் பூமியில் நிறையவே தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. இதில் குறிப்பாக வானவீதியில் உலாவந்துக்கொண்டிருக்கும் கிரகங்களுடனும் விண்மீன்களுடனும் அமானுஷ்யமான தொடர்பில் இருந்து வருகின்றது நாம் வாழும் உலகம்.
ஓர் உதாரணம் நம் இல்லத்தில் இருக்கும் தொலைகாட்சித் திரையை உட்கார்ந்த இடத்திலிருந்தே நம் இயக்கமுடியும் தானே ? எப்படி சாத்தியப்படுகின்றது ? Remote control என்கின்ற தானியக்க விசையின் மூலம் இதை நாம் செய்கின்றோம்.இது செயல் பட தொலைகாட்சி திரையில் ஈர்க்கப்படுவதற்கான விசை ஒன்றும் தானியக்க விசையில் {Remote control} ஒரு கதிரியக்க ஒளியும் { laser beam} இருத்தல் வேண்டும். இவைகள் இரண்டும் ஒலி ஒளி வடிவில் செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதே விதி, கிரக செயல்பாட்டிற்கும் பொருந்தும். ஒவ்வொரு கிரகமும் பஞ்சபூதத்தன்மையில் ஒவ்வொரு இரசாயன வேதியல் கூட்டமைப்பில் உருவாகி இருக்கின்றது..இந்த இராசயன கூட்டமைபின் அடிப்படையில் அதன் குணாதிசயங்கள் மற்றும் ஒலி ஒளியாற்றல்கள் மாறுப்பாடடைகின்றன. 7 வர்ணங்கள் இதில் பிறக்கின்றன மேலும் Gamma ray’s , Methane ray’s ,Ultraviolet ...போன்ற கதிர்வீச்சுக்கள் பூமிக்கு பயணிக்கின்றது . இவற்றில் தன்மையினால் பூமியில் பல்வேறு பரிணாமங்கள் , இயற்கை மாற்றங்கள், சீற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றது.

உதாரணத்திற்கு குரு கிரகத்தில் காணப்படும் இரசாயனங்கள் இவை carbon, ethane, hydrogen sulfide, neon, oxygen, phosphine, and sulfur. The outermost layer of the atmosphere contains crystals of frozen ammonia. Through infrared and ultraviolet measurements, trace amounts of benzene and other hydrocarbons have also been found.

ஒரு வியக்கவைக்கும் தகவல், பொதுவாக 3,12,21,30ம் தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது குருவின் வீடான தனுசு மற்றும் மீனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு உடம்பில் கட்டிகள்,தோல் சம்பந்தமான வியாதிகள் இன்னும் கூட சொல்லப்போனால் புற்றுநோய்கள் கூட ஏற்படும் என்று சோதிட அறிவியல் கூறுகின்றது. நீங்கள் கவனிக்க வேண்டியது , மேலே கந்தகம் {SULFUR} குரு கிரகத்தில் காணகிடைக்கின்றது என்று விஞ்ஞானம் சொல்கின்றது . இந்த கந்தகத்தன்மை உடலில் குன்றினாலோ கூடினாலோ மேற்கண்ட வியாதிகள் உடலில் தோன்றுகின்றன என்று சித்தமருத்துவம் அறுதியிட்டு கூறுகின்றது...இதற்கு மருந்தாக கெந்தகமெழுகு என்ற கற்பத்தை கொடுக்கின்றார்கள்..இது கந்தகத்தை சுத்தி செய்து தயாரிக்கப்படுகின்ற மருந்தாகும்....எப்படி கதை பார்த்தீர்களா ????
ஆக இவ்வைகையான தனி மனித தாக்கங்களையும், உலகளாவிய நிலையில் ஏற்படும் பௌதீக மாற்றங்களையும் முன் கூட்டியே தன் மதியூகத்தால் கண்டறிய முடியும் என்று கணக்கிட்டவர்கள் நமது சித்தர்கள்....குறிப்பாக இன்ன தேதி, இன்ன மாதம் இத்தனை மணிக்கு கிரகணம் ஏற்படும் என்று துல்லியமாக ஏத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து கூறி இருப்பது இவர்களின் அமானுஷ்ய வானவியல் கணிதத்தின் திறம் என்றால் அது மிகையாகாது தானே !!!! மேலும் இன்றைய நவீன ஆய்வுக்கலங்கள் ஆய்வு அரங்கங்கள் செயற்கை கோள்கள் எதும் இல்லாமல் அன்று எந்த விதமான யுக்திகளை கொண்டு கையாண்டிருப்பார்கள் ?

கடந்த ஆண்டு நானும் என்னுடைய சகோதரர் திருசெல்வம் அவர்களும் அவர்தம் துணைவியர் சாந்தினி அவர்களும் SYED RESTAURANT ல் அமர்ந்து double teh tarik { single tea + single tea} அருந்திக்கொண்டிருக்கும் பொழுது அன்று அமாவாசை முடிந்து நான்காம் நாள் சதுர்த்தி திதி இருக்கும் என்று நினக்கின்றேன் சரியாக ஞாபகமில்லை, அன்று நிலாவின் இருமுனைகளும் தெளிவாக வானத்தில் தடம் பதித்திருந்த்து , பஞ்சாங்கத்தில் பார்த்தால் வடப்பிறை கோடு உயர்ந்திருந்தால் அல்லது தென்பிறைக்கோடு உயர்ந்திருந்தால் இன்னப் பலன் என்று எழுதி இருப்பார்கள்.அதாவது அந்த நிலாவின் இரு முனைகளையும் வைத்து இயற்கையில் ஏற்படப்போகும் சலனங்களை முன்கூட்டியே கணிப்பது . அந்த அடிப்படையில் ஒரு சிறு மனக்கணிதம் செய்து சீனாவின் பகுதிகளில் இயற்கையின் சீற்றம் உண்டாகும் என்று பேசிக்கொண்டிருந்தேன் மறுநாள் பத்திரிக்கையில் செய்தி வெளியானது சீனாவில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளானது என்று..இதன் ரகசியம் என்னத்தெரியுமா SYED RESTAURANTன் டீ தான் அது....

எல்லாம் ஒரு சூக்கும காலக்கணிதமே !!! இதை நம் பண்டைய தமிழ் அறிவியலாலர்கள் என்று கூறப்படும் சித்தர்கள் பல வகையிலும் கையாண்டிருக்கின்றார்கள்...இவையே இன்று சோதிட சாஸ்திரத்தில் பல பிரிவுகளாகவும் உட் பிரிவுகளாகவும் பகுக்கப்பட்டிருக்கின்றது.
சோதிட சாஸ்திர பிரிவுகளில் அடியேனுக்கு தெரிந்த வரை...

1] வைத்திய சோதிடம் {ரோஹ நிதான சாஸ்திரம்} Medical astrology
2] அரசியல் சோதிடம் Mundane astrology
3] லோகாயத சோதிடம் ?????
4] ஜனன சோதிடம் Natal astrology
5] ப்ரசன்ன சோதிடம் Horary astrology
6] முகூர்த்த சோதிடம் electional astrology
7] சகுன சோதிடம் Omen oracles
8] சாமுத்திரிகா சாஸ்திரம் Human Feature base astrology
9] அஸ்தரேகை சாஸ்திரம் Palmistry
10] பஞ்சபட்ஷி சாஸ்திரம் Bio-rhythms of Natal moon
11] சர சாஸ்திரம் ???????
12] நாடி சோதிடம்
13] நஷ்ட ஜாதகம் lost horoscopy

என்று நிறையவே உண்டு. எல்லாம் மிக நுட்பமான வானவியல் கணிதத்தை அடிப்படையாக கொண்டவைகளாகும்.

இதில் நிறைய உட்பிரிவுகளும் உண்டு..உதாரணத்திற்கு...

1] சோழி ப்ரசன்னம்
2] ஆருடங்கள் [சகதேவன் ஆருடம்,அகஸ்தியர் பாய்ச்சிகை,மச்சமுனி ஆருடம் போன்றவைகள்]
3] தாம்பூல ப்ரசன்னம்
4] அஷ்டமங்கள ப்ரசன்னம்
5] தொடுக்குறி ப்ரசன்னம்
6] கபால ப்ரசன்னம்
7] சாமக்கோள் ஆருடம்
8] தேவ ப்ரசன்னம்

கீழே உள்ளவைகள் மேலை நாட்டு ப்ரசன்ன வகைகள்

6] coffee cup readings or tea leaf readings
7] Tarots reading
8] Crystal ball
9] Dies & Sand prediction {shaman}
10] I ching
11] Numerology

இதில் ப்ரசன்னம் என்றால் என்ன என்பதை பற்றி சற்றுப் பார்ப்போம்...
ஒருவர் வந்தது கேட்கின்றார்... ஐயா ! எனக்கு இரண்டு வருடங்களாக வேலை கிடைக்கவில்லை என்று...இதற்கு இரண்டு விதத்தில் பலன் காணலாம்....

time:- 4.15 pm
Date:- 15.11.2011
location:- Kuala lumpur
based on the information were given by him at that precise moment, we cast a chart with horary {RULING PLANETS} calculation and deliver the accurate answer towards his question....

1] ஒன்று அவரின் ஜனன ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்...

2] இரண்டாவது அவர் வந்து உங்களிடம் கேள்வி கேட்ட நேரத்தை சரியாக குறித்துக்கொண்டு, அப்பொழுது வானத்தில் ஏற்படும் கிரக சலன கதியை வைத்து கணக்கிடும் முறையும் உண்டு,இதை ஆளும் கிரகங்கள் முறை என்றும் கே.பி.கிறிஸ்ணமூர்த்தி பத்ததி என்றும் கூறுவர் .

கேரளாவில் தாம்பூல பிரசன்னம் என்பது மிகவும் விசேஷம்,கேள்வி கேட்க வருபவர் காலை 10 மணிக்குள்ளதாக வந்து விட வேண்டும்,வரும்பொழுது வெற்றிலை பாக்கு வாங்கியாறவேண்டும் , பின் கொண்டு வந்த வெற்றிலை பாக்கை அவர் பிரித்து கீழே வரிசையாக அடுக்கி வந்தவரிடம் ஒரு எண்ணை கேட்டு அந்த பாக்கை அந்த வெற்றிலையில் இட்டுக்கொண்டு சென்று பின் நம் கேள்விகளுக்கு பலன் சொல்வார் நம்பூதிரியார்.

இன்னுமொரு வகை தனக்கு முன்பதாக கீழே தன் பூஜை அறையில் 12 இராசிகட்டங்களை வரைந்திருப்பார் ,பின் அன்றைய கிரக நிலையை அந்தந்த கட்டத்தில் குறித்துக்கொண்டு பின் சோழி என்கின்ற ஒருவகை பால் சிப்பிகளை கீழே அந்த கட்டத்தில் தன் குலதேவதையை நினைந்து உருட்டுவார்.அப்பொழுது அந்த சிதறல்களில் காணப்படும் கணக்கை கொண்டு லக்கனம் அமைத்து மிக துல்லியமாக பலன் உரைப்பார்.
கேள்விகள் தொடுக்கும் நேரத்தில் அந்த கிரகங்கள் தன் மனதை இயக்கி வைக்கின்றன, அதே வேளையில் கேள்வி தொடுக்கும் நேரத்தை வைத்தே அதற்கான பதிலையும் துல்லியமாக கூற இயலும் ப்ரசன்ன சோதிடத்தில்..அடியேன் இதை பலமுறை சோதித்துப்பார்த்துள்ளேன்...நடைமுறைக்கு சரியாகவே உள்ளது..இதற்கு குருவருளும் திருவருளும் துணைநிற்பின் நிச்சயமாக பலன் துல்லியமாக இருக்கும்....

ஆத்தாடியோ !!!!! இன்னும் தெரியாதது எவ்வளவோ ??
ஆன்றோர்கள் தப்பிருந்தால் சுட்டிக்கட்டவும்..!!!!
வள்ளிமலையான் துணை !!!!



2 comments:

  1. இன்னும் தொடருமா இந்த கதை ... எதிர்பார்ப்புடன் நான் ...

    ReplyDelete
  2. ஐயா நான் இந்த பிரசன்ன முறைகளை உங்களிடம் இருந்து கற்க விரும்புகிறேன் தயவு செய்து பதில் கூறுங்கள்

    மகேஷ் குமார்
    கன்னியாகுமரி
    mk118117@gmail.com

    ReplyDelete