You become the light of your path.....

If you had but the faith of a mustard seed,you could say to this mountain'"Be thou moved'" and so it would be..{Jesus Christ}

Tuesday, November 22, 2011

The essence of Siva Raja Yoga...{BRAMAHVIDYA}




>
ப்ரம்ம வித்தை


மரணத்திற்குப் பிறகும் மரணிக்காமல் இருக்கும் சித்த யோக இரகசியம்

மரணம் என்பது இயற்கை. அதை மாற்றிக் காண்பதே சித்தர்களின் கற்ப சாதனை என்பது போல், கற்பம் என்னும் மருத்துவ முறைகளினால், காற்றைப் சரியாக இயக்கும் முறைகளினால் மரணத்தை வெல்ல முடியும் என்று சித்தர்கள் கூறக் காணலாம்.
மனிதனின் சிரசுக்குளே ஞான விந்தை நடந்துகொண்டிருக்கிறது இதனை சித்த மார்க்கத்தில் தெளிவாகவும் சூக்குமமாகவும் விளக்கியுள்ளார்கள்.
நம் தலைக்குள் இரண்டு முக்கிய புனித ஸ்தலங்கள் உண்டு, ஒன்று மகேஸ்வரி பீடம் ஆக்ஞா சக்கரம் {PITUITARY GLAND} மற்றொன்று சதாசிவ {PENIAL GLAND} பீடம் நெற்றிக்கு நடுவில் இருக்கும் ஸ்தலம் ...பலர் நெற்றிக்கண்ணும் {THIRD EYE} புருவநடுவையும் {AKNJA CHAKRA} ஒன்று என்று தவறாக புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
நெற்றிக்கண் என்பது பீனியல் {PENIAL} சுரப்பி இருக்கும் இடம் இது ஆகாச வடிவில் பீனியல் சுரப்பியோடு இணைந்திருக்கின்றது...
if you look at the brain anatomy the exact location of the Third eye is just above the PINEAL GLAND and it is animated in the form of AKASH...space, which has a strategic influence on the particular gland.So now the secret of yoga is to travel to the SAT [truth] CHIT {consciousness} ANANDA [bliss] zone....how ????
இதை சரியான ஞான ஆசான் தொட்டுக்காட்டாமல் இந்த இரகசியம் புரியாது உணர்ந்துக்கொள்ளவும் முடியாது...
இன்று அறிவியல் கூறும் உண்மை என்னத்தெரியுமா ? இந்த சுரப்பியை சரியாக இயக்குவதன் மூலம் மனிதன் பலக்காலம் வாழமுடியும் அதுவும் நிறைந்த ஞானசெல்வத்துடன் .........
பீனியல் சுரப்பு (Pineal Gland)
பீனியல் சுரப்பி என்பது மனித மூளையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்கத்தை யோகத்தின் மூலமாகச் செயல்பட வைப்பதே சித்த முறையாகும். பீனியல் சுரப்பு 14 வயது வரை வளர்ச்சியடைந்து பின்னர் அதன் வளர்ச்சிக் குன்றிவிடும். பீனியல் சுரப்பி மூலம் சுரக்கும் ஹார்மோன், ‘மெலடோனின்’ எனப்படும். மெலடோனின் {MELOTONIN} எனப்படும் ஹார்மோன் மனித ஆயுளை நீட்டிக்கவும் பாதுகாக்கவும் வல்லது என்பர்.
இதை தவிர்த்து செரொடொனின் { SEROTONIN },டொபொமின் {DOPOMINE} ,ஒக்சிதொசின் { OXTOCIN } மற்றும் ஓபியத்ஸ் { BRAIN OPIATES }
மூளையில் இருக்கும் நுண்மின்னியங்கி சமிக்ஞை (NEUROTRANSMITTERS) இந்த இரசாயனங்களை சரிவர நாம் இயக்குவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்க்கையில் தோன்றும் எல்லவிதமான இயற்கை சூழ்ந்தழுத்தங்களையும் எதிர்கொள்ள முடியும்.....
SEROTONIN – INCREASED SELF-ESTEEM
DOPOMINE – ANTIDEPRESSANT
OXYTOCIN – PLEASURE HORMONES
OPIATES – BODY PAINKILLERS

இதன் சுரப்பை நீட்டிக்க முறையான மூச்சுபயிற்சி , வாசியோகம், சிவஇராஜயோகம் பயன்படுகிறது .அல்லது CHI QONG பயிற்சியில் கூட இதை சரிக்கட்டலாம். இச் சுரப்பு குறைந்தால் ஆயுளும் குறையும். மெலடோனின் சுரப்பை அதிகரிக்க யோகம், கற்பம் போன்றவை பயன்படுகின்றன
இதை பற்றிய ஞான உண்மைகளை திருக்குறளில் வள்ளுவஞானப்பேராசன்..........

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்....{திருக்குறள்}
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்..... {திருக்குறள்}
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் {திருக்குறள்}
இந்தக்குறளிலே மலர்மிசை, மானடி ,அடக்கம் ,வையம் , என்பதும் பரிபாஷைகளாகும் {secret code word} இன்னும் நிறையவே உண்டு...
இதை காகபுஜண்ட மகரிஷி வழிமொழிந்து இந்த கவியில் அதன் சூக்குமத்தை உரைகின்றார்.....
பாரப்பா பரபிரம்ம ஒளியினாலே
பத்தியே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருக்கண்ணில் ஒளிவதாகி
அணடமெல்லாம் ஏகமாய் தெரியலாச்சு
காரப்பா நரம்பென்ற விழுதுவட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிப்பெற இன்னுமுந்தான் { உரைக்க்கேளு } நுரைக்கக் கேளே.....

பாரடா புருவமத்தி யேதென் றாக்கால் {ஏது என்றாக்கால்}
பரபிரம்ம மானதோர் அண்டவுச்சி
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுமுனையென்று நினைவாய் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா
மேவடா மனந்தனையுஞ் {மனம் தனையும்} செலுத்தும் போது
காரடா சுழுமுனையிழே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து {கலந்து ஐந்து பூதமும்} ஒன்றாய் போமே

ஆக இதை சரியாக புரிந்துக்கொள்வதே ஆன்மீகம் மற்றெல்லாம் தெய்வீகம்....
இதைத்தான் ஏசுப் பிரான் “தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் அருளப்படும்..”.என்கிறார்....
புத்தர் “அப்போ தீபோ பவ......” உனக்கு நீயே ஒளியாக இரு என்கிறார்
மாணிக்கவாசகப்பெருமான் “ தேடிக்கொண்டுக்கொண்டேன் தேடொணாத்தேவனை என்னுள்ளே தேடிக்கண்டுக்கொண்டேன்....”
ஆத்மா வித்தை என்பதும் ப்ரம்ம வித்தை என்பதும் சித்த வித்தை என்பது இதுவேயாகும்....!!!!!!!
“ இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே.......”
வள்ளிமலையான் துணை..

No comments:

Post a Comment